Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சொத்து விவரங்கள் தொடர்பாக வருமானவரித்துறை விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் குமரவேல் தாக்கல் செய்த மனுவில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும், 2026 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள சொத்து விவரங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை மற்றும் மத்திய கார்ப்ரேட் விவகார அமைச்சகம் இணைந்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனிடையே, வேட்புமனுவில் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ