ஆதவ் அர்ஜுனா மீது புகார் -வேட்பு மனுவில் மனைவி சொத்து விவரம் குறிப்பிடாததாக குற்றச்சாட்டு
சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச) 2026 சட்டமன்ற தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா மீது, அவரது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை முழுமையாக குறிப்பிடவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்பாளர் த
ஆதவ் அர்ஜுனா


சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச)

2026 சட்டமன்ற தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா மீது, அவரது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை முழுமையாக குறிப்பிடவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்பாளர் தனது மற்றும் குடும்பத்தினரின் சொத்து விவரங்களை முழுமையாக அறிவிக்க வேண்டும்.

ஆனால், ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த சத்தியப்பிரமாணத்தில் அவரது மனைவியின் சொத்துகள் பற்றிய விவரங்கள் சேர்க்கப்படவில்லை என எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், வேட்புமனு செல்லுபடியாக உள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

புகார் உண்மை என நிரூபிக்கப்பட்டால், வேட்புமனு நிராகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / GOKILA arumugam