ரூ.8,000 கூப்பன் விநியோகம் குற்றச்சாட்டு - திமுக, அதிமுக மீது உயர்நீதிமன்றத்தில் முறையீடு
தமிழ்நாடு, 16 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகம் முழுவதும் ₹8,000 மதிப்புள்ள பரிசு கூப்பன்கள் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதைத் தடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றம்த்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையீட்டை வழக்கறிஞர் சூரிய ப
உயர்நீதிமன்றம்


தமிழ்நாடு, 16 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் ₹8,000 மதிப்புள்ள பரிசு கூப்பன்கள் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதைத் தடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றம்த்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறையீட்டை வழக்கறிஞர் சூரிய பிரகாசம் முன்வைத்துள்ளார். அவரது மனுவில், திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்படுவதாக கூறி, அந்த விநியோகத்தை உடனடியாக தடுத்து நிறுத்தவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை நாளை விசாரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதே வேளை, துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர். மனோகர் டோக்கன் விநியோகம் செய்து வருவதாகவும் மற்றொரு முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்கறிஞர் ஷியாம்குமார் தாக்கல் செய்துள்ளார்.

இந்த இரண்டாவது மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்று, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

தேர்தல் காலத்தில் இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Hindusthan Samachar / GOKILA arumugam