Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 16 ஏப்ரல் (ஹி.ச.)
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமையும் என ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கொண்டு வரப்பட்ட ‘நாரி சக்தி வந்தன்’ சட்டத் திருத்த மசோதா மகளிர் முன்னேற்றத்திற்கான வரலாற்றுச் செயலாகும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா மூலம் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவது அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
ஜனசேனா கட்சி எப்போதும் உறுதியாக செயல்பட்டு வருகிறது என்றும், 2019 தேர்தலில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பெண்களுக்கு சம வாய்ப்பு மற்றும் உரிய இடம் வழங்கும் நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் தனது கருத்துகளை பகிர்ந்த அவர்,
பெண்கள் சமூகத்தின் அடித்தளம் என்றும், குடும்ப வளர்ச்சியிலிருந்து நாட்டின் முன்னேற்றம் வரை அவர்களின் பங்கு அளவிட முடியாதது என்றும் கூறினார்.
பெண் முன்னேறினால் நாடும் முன்னேறும். இது புதிய உரிமைகள் வழங்குவது அல்ல; அவர்களுக்கு உரியதை மீண்டும் வழங்குவது.
‘நாரி சக்தி’ என்பது வெறும் கோஷம் அல்ல; நம் நாகரிகத்தின் பலம்” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், பல்வேறு துறைகளில் சாதித்து வரும் இந்திய பெண்களின் வெற்றிகளை அவர் பாராட்டினார்.
செஸ் விளையாட்டில் வைஷாலி சாதனை, இஸ்ரோ விஞ்ஞானி ரித்து சேவை, ஒலிம்பிக் போட்டிகளில் பிவி சிந்து ,மீராபாய் ஜானு குத்துச்சண்டையில் நிக்காஹ் சாரின் ஆகியோர் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்று தெரிவித்தார்.
திறமைக்கு வாய்ப்பு கிடைத்தால் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னிலை வகித்து நாட்டிற்கு முன்மாதிரியாக இருப்பார்கள் என்றும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA