Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 16 ஏப்ரல் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச மாநில ஐடி மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ், எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
மாநிலத்திற்கு நன்மை தரும் நிறுவனங்கள் வரும்போது அவற்றை தடுக்க முயல்வது “ராட்சச மனநிலை” என அவர் குற்றம்சாட்டினார்.
நாட்டின் பாதுகாப்பிற்கு பயன்படும் அதிநவீன படகுகளை தயாரிக்கும் நிறுவனம் மாநிலத்திற்கு வருவது வரவேற்கத்தக்கது என்றும், அதைத் தடுக்க முயல்வது தவறானது என்றும் தெரிவித்தார்.
இந்த நிறுவனம் மூலம் மீனவர்கள் குழந்தைகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அதைத் தடுக்க முயல்வது மக்கள் நலனுக்கு எதிரானது என்றும் லோகேஷ் கூறினார்.
இதுபோன்ற நடவடிக்கைகளை அவர் “சைக்கோ மனநிலை” என விமர்சித்தார்.
மேலும், ஜெகன் மீது மறைமுகமாக தனிப்பட்ட குற்றச்சாட்டுகளையும் முன்வைத்த லோகேஷ், “தாயை விலக்கினார், சகோதரியை அகற்றினார்;
நாட்டை நேசிப்பது இல்லை, அழிவை மட்டுமே நினைக்கிறார் என்று கடுமையாக தாக்கினார்.
மாநில வளர்ச்சிக்கு இடையூறு செய்யும் செயல்களை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் லோகேஷ் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA