ரொட்டேஷன் அமைச்சர் ராஜகண்ணப்பன் - அண்ணாமலை விமர்சனம்
ராமநாதபுரம், 16 ஏப்ரல் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் மலேசியா பாண்டிக்கு ஆதரவாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது, வெயிலை பொருட்ப
ரொட்டேஷன் அமைச்சர் ராஜகண்ணப்பன் - அண்ணாமலை விமர்சனம்


ராமநாதபுரம், 16 ஏப்ரல் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் மலேசியா பாண்டிக்கு ஆதரவாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது,

வெயிலை பொருட்படுத்தாமல் எனக்காக காத்து இருக்கிறீர்கள். இங்கு போட்டியிடும் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்து துறை அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், பால்வளம், வனத்துறை என்று ஒவ்வொரு பிரச்னைக்காக மாற்ற பட்டுள்ளார். ரொட்டேஷன் (Rotation) அமைச்சர் ராஜகண்ணப்பன். இவர் செல்லும் இடம் எல்லாம் எதிர்ப்பு, அமைச்சரை ஓட்டு கேட்டு வர வேண்டாம் என சொல்லி உள்ளனர்.

2 பேர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறீர்கள் என்று காங்கிரஸ் கட்சியை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சொல்லி உள்ளார். 5 வருடம் பிறகு தேர்தல் நேரத்தில் அமைச்சர் மக்களை சந்திக்கிறார். திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் பெண்களுக்கான எதிரான குற்றம் 2080 கற்பழிப்பு வழக்குகள், 8,008 படுகொலைகள் நடந்து உள்ளது.

குழந்தைகள் பாலியல் குற்றம் 39,900 நடந்து உள்ளது. பிரேமலதாவே முதல்வரை மேடையில் வைத்துக் கொண்டு போதை கலாச்சாரம் பற்றி கூறி உள்ளார். இந்த 5 ஆண்டு செய்ததை சொல்வதில்லை. அடுத்த 5 ஆண்டு செய்ய போவது குறித்தும் சொல்வது இல்லை, அவர்களுக்கு தெரிந்தது சமஸ்கிருதம், ஹிந்தி மட்டுமே பேசி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு சந்தி சிரிக்கிறது.

8 ஆயிரம் டோக்கன் பிரச்னையில் தேர்தல் கமிஷன் தலையிட்டுள்ளது. மே 4ம் தேதிக்கு பிறகு இபிஎஸ் ஆட்சி புரிவார் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி நிறைய செய்துள்ளார். மருத்துவக்கல்லூரி, ராமேஸ்வரம் ரயில்வே நிலையம், 1800 கோடி ரூபாய் பரமக்குடி ராமநாதபுரம் 4 வழி சாலை, ரூ3,900 கோடி செலவில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் ராம்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் பலன் பெறும்.

இந்த மாவட்டத்தில் 47% மாவட்டத்தில் குழாய் மூலம் நீர் வழங்கப்படுகிறது. மற்ற மாவட்டதில் 99% நிறைவடைந்து உள்ளது.

குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம். கடந்த வாரம் தலைமை செயலாளர் மாற்றம், 2 நாட்களுக்கு முன் டிஜிபி மாற்றம், 23ம் தேதி முதல்வரை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Hindusthan Samachar / vidya.b