Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 ஏப்ரல் (ஹி.ச.)
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று
(ஏப்ரல் 16) காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் 106வது அரசியல் சாசன சட்டத் திருத்தம், 2023 ஐ அமல்படுத்துவதற்கான சட்டத் திருத்த மசோதாவை இன்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி எம்பி வேணுகோபால் வலியுறுத்தினார்.எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. எம்பிக்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் முஸ்லீம் பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சமாஜ்வாதி எம்பி அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார்.
பெண்களை மத ரீதியாக பிரித்து பார்க்க வேண்டாம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். மத ரீதியாக இட ஒதுக்கீடு தர அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த சிறப்பு கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கிடையே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு 'இண்டி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Hindusthan Samachar / vidya.b