Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில், தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில், கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு, மறுவரையறை நகலை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, மதசார்பற்ற முப்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மா. சுப்பிரமணியனை ஆதரித்து, கோட்டூர்புரம் மேற்கு கெனால் சாலை, மண்டபம் சாலை, பீலி அம்மன் கோயில் சாலை, பாரதி அவென்யூ, எல்லையம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில் இருவரும் உட்பட நிர்வாகிகள் கருப்பு உடை அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே. பாலகிருஷ்ணன்,
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இன்றைய தினம் கருப்பு தினமாகும். மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில், நாட்டின் ஒற்றுமையையும் ஜனநாயக அமைப்பையும் பாதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வர முயற்சிக்கிறது.
வடக்கு–தெற்கு பாகுபாட்டை உருவாக்கும் இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் பெரிய போராட்டங்களுக்கு வழிவகுக்கும்,” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், அரசியல் ஆதாயத்திற்காக ஒன்றிய அரசு இந்த திட்டத்தை முன்னெடுக்கிறது. தமிழ்நாட்டில் இந்த முயற்சிகள் பலிக்காது, என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டிய அவர், “பாஜகவுடன் இணைந்து தமிழ்நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மா. சுப்பிரமணியன்,
சைதாப்பேட்டை தொகுதியில் தொடர்ந்து 13 நாட்களாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் நேரடியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறோம். வேட்பாளர்கள் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர், என்றார்.
மேலும், வடமாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் வழங்கி, தென் மாநிலங்களுக்கு குறைந்த இடங்கள் வழங்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.
இது தென்னிந்தியாவை புறக்கணிக்கும் செயலாகும், என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த நிகழ்வு, தொகுதி மறுவரையறை மற்றும் அதன் தாக்கம் குறித்து அரசியல் தரப்புகளில் விவாதத்தை அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ