Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் விதிமீறல் நடைபெற்றதாக தமிழக வெற்றிக் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,
கொருக்குப்பேட்டை பகுதியிலுள்ள ஆனந்த விநாயகர் கோவில் தெருவில், திமுக சார்பில் ரூ.8,000 மதிப்புள்ள டோக்கன்கள் அல்லது கூப்பன்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமுறைகளை வெளிப்படையாக மீறும் செயல் என கட்சி குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமும் காவல்துறையும் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து, முறைகேட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஜனநாயக முறையைப் பாதுகாக்க அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டியது அவசியம் எனவும் அந்தக் கட்சி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ