சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலைய வாசலில் யாசகம் பெற்று வந்தவர் கொலை வழக்கில் கைதானவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பியதால் பரபரப்பு
சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலைய வாசலில் யாசகம் பெற்று வந்தவர் முருகன் (40). இவர் நேற்று ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் ரத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் கிடப்பதாக சைதாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசா
Said


சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலைய வாசலில் யாசகம் பெற்று வந்தவர் முருகன் (40).

இவர் நேற்று ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் ரத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் கிடப்பதாக சைதாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிய முருகனை சிகிச்சைக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேல்சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வரும் வழியிலேயே முருகன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முருகனை யாரோ கடுமையாக தாக்கி இருப்பது தெரிய வந்தது.

அது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

விசாரணையில், கொல்லப்பட்ட முருகனும் தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த நாராயணன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி விட்டு பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது முருகன், நாராயணின் குடும்பத்தினரை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

ஆத்திரத்தில் நாராயணன் அவரை கல்லால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது.

இதைய்டுத்து தப்பி ஓடிய நாராயணனை சைதாப்பேட்டை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு நாராயணனை போலீசார் உடற்தகுதி மருத்துவ சான்றிதழ் எடுப்பதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது கண்இமைக்கும் நேரத்தில் நாராயணன் போலீஸ் பிடியிலிருந்து தப்பி சென்றார்.

அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

போலீஸ் பிடியில் இருந்து விசாரணை கைதி தப்பியதால் காவல்துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியிலான விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ