சென்னையில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணிகள் தொடக்கம்
சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு முழுவதும் வருகிற சட்டமன்ற தேர்தலை ஒட்டி மற்ற மாவட்டங்களில் வெவ்வேறு தேதிகளில் வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகு
வாக்குப்பதிவு


சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு முழுவதும் வருகிற சட்டமன்ற தேர்தலை ஒட்டி மற்ற மாவட்டங்களில் வெவ்வேறு தேதிகளில் வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று தேர்தல் அலுவலர்கள் வாக்குகளை சேகரிக்கும் பணியை இன்று முதல் தொடங்கியுள்ளனர்.

இன்று முதல் 18 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.

ஏற்கனவே தபால் வாக்கு செலுத்த 12D படிவத்தை பூர்த்தி செய்து அளித்துள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களிடம் வீடு வீடாக சென்று தேர்தல் அலுவலர்கள் ரகசியமாக அவர்களின் வாக்குகளை சேகரித்து அதனை சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள்.

வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் சின்னத்தை ரகசியமாக டிக் செய்து வாக்கு செலுத்தினர்.

வாக்கு செலுத்திய படிவத்தை வாங்கி சீல் இடப்பட்ட பெட்டிக்குள் வைத்து அதனை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள்.

Hindusthan Samachar / GOKILA arumugam