Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் 2030-க்குள் நடைபாதைகள், மரங்கள் மற்றும் மக்கள் நட்பு வசதிகளுடன் கூடிய ‘முழுமையான சாலைகள்’ உருவாக்கப்படும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளமான எக்ஸ் ளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
‘#StalinStatement’ எனும் 14 அம்சத் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், திராவிட மாடல் 2.0 வழியாக நகர்ப்புற உட்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்த அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
‘முழுமையான சாலைகள்’ திட்டத்தின் மூலம் சாலைகள் அனைத்துப் பயனாளர்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றப்படும். நடைபாதைகள் விரிவுபடுத்தல், சாலையோர மரநடுகை, சைக்கிள் பயணிகளுக்கான தனி பாதைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் போன்றவை இதில் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
சென்னையில் ஏற்கனவே சில பகுதிகளில் நடைபாதை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டம் விரைவில் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி மூலம் நகரங்களில் பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்து வசதிகள் உருவாகி, தமிழ்நாட்டின் நகரங்கள் உலகத் தரத்தில் உயர்வதற்கு வழிவகுக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / P YUVARAJ