Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 16 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மகளிருக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்படுவது சமூக முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தன்னலமின்றி உழைக்கும் பெண்களுக்கு அவர்கள் பெற வேண்டிய மரியாதையை வழங்கும் தருணங்களில் அவர்கள் அடையும் மகிழ்ச்சி மிகப்பெரியது என தெரிவித்துள்ளார். அந்த உணர்வை ஆயிரக்கணக்கான பெண்களின் முகங்களில் ஒரே நேரத்தில் கண்டபோது தாம் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் சமூகத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் என்பதையும், அவர்களின் உழைப்பும் பங்களிப்பும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் தனது பதிவில் எடுத்துக்காட்டியுள்ளார். குடும்பத்திலும், சமூகத்திலும், வேலைத்தளங்களிலும் பெண்களுக்கு சம உரிமை மற்றும் மரியாதை வழங்கப்படுவது ஒவ்வொரு ஆணின் கடமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பெண்களை மதிக்கும் மனப்பான்மை வளர்ந்தால்தான் சமத்துவமான சமூகத்தை உருவாக்க முடியும் என்றும், பெண்களின் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றமாகும் என்றும் மு.க. ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam