சிதம்பரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவர் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை
கடலூர், 16 ஏப்ரல் (ஹி.ச.) கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் சக்திவேல் (15), பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர். கடந்த 13ஆம் தேதி “விளையாடி வருகிறேன்” என கூறி வீட்டிலிருந்து வெளியேறிய சக
நீரில் மூழ்கி


கடலூர், 16 ஏப்ரல் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் சக்திவேல் (15), பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்.

கடந்த 13ஆம் தேதி “விளையாடி வருகிறேன்” என கூறி வீட்டிலிருந்து வெளியேறிய சக்திவேல், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இரண்டு நாட்கள் கடந்தும் மாணவன் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, மாணவனின் பெற்றோர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மாணவனின் வீடு அருகே உள்ள கொள்ளிடம் ஆறு பகுதியில், மூன்று நாட்களுக்குப் பிறகு சக்திவேலின் சடலம் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் குடும்பத்தினரும் உறவினர்களும் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகனின் மரண செய்தியை அறிந்த பெற்றோர் கதறி அழுதது பார்ப்போரின் கண்களையும் கலங்க வைத்தது.

சம்பவம் குறித்து அண்ணாமலை நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் விளையாடச் சென்றபோது ஆற்றில் குளிக்க இறங்கியதில் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P