Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச)
திமுக எம்.எல்.ஏவும் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளருமான எழிலன் நாகநாதன்
மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு வெளியே தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் நடத்தினார்.
போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,
தொகுதி மறுவரையறை திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றது. இன்று ஒவ்வொரு மாநிலமும் நமது முதலமைச்சரின் குரலுக்கு பின்னால் அணிதிரண்டுள்ளது.
ரேவந்த் ரெட்டி, மேற்கு வங்கம் மற்றும் பாதிக்கப்படும் மற்ற மாநிலங்களிலிருந்து கடிதங்கள் வந்துள்ளன. இந்த மசோதா தென்னிந்திய மாநிலங்களை பாதிக்கும் என்பதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
தென்னிந்திய மாநிலங்களின் பங்களிப்பை ஒன்றிய அரசு அங்கீகரிக்கவில்லை. தொகுதி மறுவரையறை திட்டங்கள் வடமாநிலங்களில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதேவேளையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும்.
வாக்கு வங்கி அரசியலுக்காகவும் திசை திருப்பும் தந்திரமாகவும் தொகுதி மறுவரையறையை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் இணைத்துள்ளனர். மேலும் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை பயன்படுத்து கண்டிக்கத்தக்கது.
தொகுதி மறுவரையறைக்கு முன்னதாக புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b