Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 16 ஏப்ரல் (ஹி.ச.)
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்,
இந்த தருணத்தில் அனைத்து பெண்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும், முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதித்து வருகிறார் என தெரிவித்தார்.
திருச்சியில் கூட திமுகவின் இலவச கூப்பன் விவகாரம் தொடர்பாக ஒரு பெண் திமுக குண்டர்களால் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் அந்த பெண்ணை அவமதித்து இழிவு படுத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் ஒரு பாதுகாப்பற்ற அரசாங்கம் என்று தெரிவித்த அவர் இங்கு Delimitationக்கு எதிராக போராட்டம் மேற்கொள்கிறார்கள் ஆனால் அது பெண்களுக்கு சாதகமான ஒன்றுதான் என்று தெரிவித்தார்.
இவர்கள் (திமுக) பெண்கள் முன்னேற வேண்டாம் என்று நினைக்கிறார்கள் திமுகவின் உதயசூரியன் சின்னம் என்பது உதயசூரியன் அல்ல அஸ்தமனமாக கூடிய சூரியன் என்று விமர்சித்தார். மேலும் முதல்வர் பெண்களுக்கு எதிரானவர் அவர் ஒரு Culprit என ஆவேசமாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J