திமுகவை நிராகரிப்போம் - ஏழு குற்றச்சாட்டுகளுடன் அதிமுக ஐடி விங் அணியின் கடும் குற்றச்சாட்டு
தமிழ்நாடு, 16 ஏப்ரல் (ஹி.ச.) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி லிங்க் அணி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய அரசு திமுக என குற்றம
அதிமுக


தமிழ்நாடு, 16 ஏப்ரல் (ஹி.ச.)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி லிங்க் அணி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில்,

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய அரசு திமுக என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதும் ஆட்சியின் பெரிய தோல்வியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டம்-ஒழுங்கு நிலைமை சரிவர பராமரிக்கப்படவில்லை என்றும், தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பலவும் நிறைவேற்றப்படாமல் மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் ஊழல் மூலம் கொள்ளையடித்ததாகவும், சமூக நீதி நிலைநாட்டப்படவில்லை என்றும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் அதிகார மமதையால் அராஜகச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இறுதியாக, அப்போதும் வேண்டாம், இப்போதும் வேண்டாம், இனி எப்போதும் திமுக வேண்டாம்” என்ற கோஷத்துடன் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam