Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 ஏப்ரல் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்தார்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) உயிரிழந்த ஒவ்வொருவரின் வாரிசுதாரர்களுக்கும் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-ம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மந்த்ராலயம் மண்டலம் சிலகலதொண்ணா அருகே பொலேரோ வாகனம் ரெடி-மிக்ஸ் லாரி மீது மோதியதில் இந்த விபத்து நேரிட்டது. காவல்துறை தகவலின்படி, சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். சிகிச்சையின்போது மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 10 முதல் 12 பேர் வரை காயமடைந்து எம்மிகனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு பகுதியைச் சேர்ந்த யாத்ரீகர்கள் என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b