Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூர் , 16 ஏப்ரல் (ஹி.ச.)
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று லீக் முறையில் போட்டியிட்டு வருகின்றன.
இந்த தொடரின் 23-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டிக்கான டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, தொடக்கம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது.
20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பெங்களூரு அணியின் பந்துவீச்சில் ரசிக் சலாம் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பான பங்களிப்பு செய்தார்.
இதனைத் தொடர்ந்து 147 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, தன்னம்பிக்கையுடன் ஆடி இலக்கை எளிதில் எட்டியது.
லக்னோ அணியின் பந்துவீச்சில் ப்ரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினாலும், அது அணியின் தோல்வியை தவிர்க்க போதவில்லை.
இறுதியில் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முக்கியமான 2 புள்ளிகளை கைப்பற்றியது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA