Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 16 ஏப்ரல் (ஹி.ச.)
தொகுதி மறுவரையறைக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் வீடுகள் தோறும் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்பேரில் தமிழகம் முழுவதும் திமுகவினர் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தியும், வீடுகளின் முன் கருப்புக் கொடி கட்டியும், கோலமிட்டும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் மத்திய அரசின் ‘தொகுதி மறுவரையறை’நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்குச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தலைமை தாங்கினார். இதில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் கலந்துகொண்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை சட்டநகலை அவர்கள் தீயிட்டு எரித்துத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இதில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டு தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் இந்த கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
Hindusthan Samachar / vidya.b