தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர்.காந்தி கருப்புக்கொடி போராட்டம்
ராணிப்பேட்டை, 16 ஏப்ரல் (ஹி.ச) தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) வேட்பாளருமான ஆர்.காந்தி, மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று ராணிப்பேட்டையில் உள்ள தனது இல்லத்த
அமைச்சர் ஆர்.காந்தி


ராணிப்பேட்டை, 16 ஏப்ரல் (ஹி.ச)

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) வேட்பாளருமான ஆர்.காந்தி, மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று ராணிப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தின் முன் கருப்புக்கொடி ஏற்றி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மத்திய அரசின் இந்த மசோதாவுக்கு திமுக தலைமை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இன்று (ஏப்ரல் 16-ஆம் தேதி) தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்த மசோதா குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்மொழியப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கட்சியினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினரும் பொதுமக்களும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து தங்கள் வீடுகளின் முன் கருப்புக்கொடி ஏற்றி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்கும் முன்மொழியப்பட்ட மசோதாவின் நகலை எரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலம் தழுவிய தொகுதி மறுசீரமைப்பு எதிர்புப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

நாரி சக்தி வந்தன் அதினியம், 2023 சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு சமீபத்தில் வரைவு திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிரான எதிர்ப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.

இன்று, திருச்சிராப்பள்ளி கருமண்டபம் பகுதியில் திமுகவினர் மற்றும் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சிராப்பள்ளி தென்னூரில் உள்ள தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்திலும் மசோதாவுக்கு எதிர்பு தெரிவித்து கருப்புக்கொடி கட்டப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b