Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.)
உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வைஷாலிக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
நேற்றைய தினம் FIDE Women's Candidates Chess World Championship Challenger பட்டத்தை வென்று உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள செல்வி.
வைஷாலி அவர்களுக்கு என் இதயம் கனிந்த மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக அரங்கில் நம் பாரத நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ள அவரது இந்த சிறப்பான சாதனை பாராட்டுக்குரியது. அர்ப்பணிப்பு, திறமை மற்றும் உறுதியான முயற்சியின் மூலம் அவர் எடுத்துவரும் இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்து மேலும் உயரங்களை எட்டட்டும்.
மேலும், உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை நம் தமிழகத்தின் பெருமையைப் பதித்துள்ள செல்வி.
வைஷாலி அவர்கள், வரவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெற்றி பெற்று பட்டத்தை வெல்ல என் மனமார்ந்த வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b