மக்களவையில் அமித்ஷா–வேணுகோபால் இடையே காரசார வாதம்
புதுடெல்லி , 16 ஏப்ரல் (ஹி.ச.) மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தொடர்பாக நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில், மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் காங்கிரஸ் எம்.பி கே.சி. வேணுகோபால் இடையே காரசார வாக்கு
D


புதுடெல்லி , 16 ஏப்ரல் (ஹி.ச.)

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தொடர்பாக நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில், மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் காங்கிரஸ் எம்.பி கே.சி. வேணுகோபால் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

மக்களவையில் உரையாற்றிய கே.சி. வேணுகோபால், இந்திய அரசியல் சாசனம் முழுமையாக ஒருதரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

முக்கியமான மசோதாக்கள் குறித்து சுதந்திரமாக கருத்து தெரிவிக்க முடியாத சூழல் நிலவுகிறது என்று குற்றம் சாட்டினார்.

அப்போது அமித்ஷா அடிக்கடி குறுக்கீடு செய்து பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த வேணுகோபால், வார்த்தைக்கு வார்த்தை குறுக்கீடு ஏன்? பேச அனுமதி அளிக்காமல் தடுக்க முயற்சி செய்வது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமித்ஷா, எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை மறுத்து, மசோதாக்கள் அரசியல் சாசனத்திற்குட்பட்ட விதிமுறைகளின் பேரிலேயே கொண்டு வரப்பட்டுள்ளன என்று விளக்கம் அளித்தார்.

இந்த விவாதம் காரணமாக மக்களவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னர் சபாநாயகர் தலையிட்டு உறுப்பினர்களை அமைதிப்படுத்தினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA