நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்கள் மீது 12 மணி நேரம் விவாதம் - நாளை மாலை வாக்கெடுப்பு!
புதுடெல்லி , 16 ஏப்ரல் (ஹி.ச.) 3 நாட்கள் நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கின. இதனைத் தொடர்ந்த
D


புதுடெல்லி , 16 ஏப்ரல் (ஹி.ச.)

3 நாட்கள் நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கின.

இதனைத் தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்கள் மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த மசோதாக்கள் மீது விரிவான விவாதம் நடத்த அவை தீர்மானித்துள்ளது.

மொத்தம் 12 மணி நேரம் விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய உள்ளனர்.

முக்கியமாக, மகளிருக்கு சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து தீவிரமான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 3 மசோதாக்கள் மீது நாளை மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இதனால் நாடாளுமன்றத்தில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA