Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 16 ஏப்ரல் (ஹி.ச.)
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலுக்குச் செல்லப் பக்தர்கள் அதிகம் விரும்பும் சேவையான ரோப் கார், மாதத்திற்கு ஒரு முறை தொழில்நுட்பச் சீரமைப்புக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இன்று அதிகாலை முதலே ரோப் கார் நிலையம் மூடப்பட்டு, பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் முன்னிலையில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரோப் காரின் கம்பி வடங்கள், பெட்டிகள் மற்றும் சக்கரங்களின் உறுதித்தன்மை குறித்து இன்று விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், இன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் மின் இழுவை ரயில் (வின்ச்) நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
மேலும், ஏராளமான பக்தர்கள் படிப்பாதை மற்றும் யானைப் பாதையைப் பயன்படுத்தி மலைக்கோவிலுக்குச் சென்று வருகின்றனர்.
இன்று மாலைக்குள் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடையும் பட்சத்தில், நாளை (ஏப்ரல் 17) காலை முதல் ரோப் கார் சேவை மீண்டும் வழக்கம்போல் தொடங்கும் எனத் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN