புதுச்சேரியில் மாயமான கட்டிட தொழிலாளி பெண் அழுகிய நிலையில் சடலமாக  கண்டெடுப்பு
புதுச்சேரி, 16 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரி,ஊசுட்டேரி வாழப்பட்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி அமுதா(53),கட்டிட தொழிலாளியான இவர் கடந்த வாரம் அரும்பாத்தபுரம், வெண்ணிசாமி நகர் பகுதியில் உள்ள தனது மூத்த மகன் வடிவேலு வீட்டிற்கு
கொலை


புதுச்சேரி, 16 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரி,ஊசுட்டேரி வாழப்பட்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது

மனைவி அமுதா(53),கட்டிட தொழிலாளியான இவர் கடந்த வாரம் அரும்பாத்தபுரம்,

வெண்ணிசாமி நகர் பகுதியில் உள்ள தனது மூத்த மகன் வடிவேலு வீட்டிற்கு

சென்றுள்ளார்.

இதனிடையே கடந்த 12ஆம் தேதி தனது தாய் அமுதாவை காணவில்லை என

மூத்த மகன் வடிவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்

வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அமுதாவை தேடிவந்தனர்.

இந்நிலையில்

சந்தேகத்தின் பேரில் அமுதா உடன் பணிபுரிந்த புதுச்சேரி, தருமாபுரி பகுதியைச்

சேர்ந்த கொத்தனார் பரந்தாமன் என்பவரை வில்லியனூர் போலீசார் கைது செய்து ரகசியமாக விசாரணை மேற்கொண்டதில், கொத்தனார் பரந்தாமனுக்கும் அமுதாவிற்கும்

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது.

இதன் காரணமாக அமுதாவிடம் தனியாக பேச

வேண்டும் எனக் கூறி பரந்தாமன் விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பூத்துரை அருகே உள்ள முந்திரி தோப்பிற்குள் அமுதாவை வரவழைத்துள்ளார்.

அப்பொழுது அங்கு

வந்த அமுதாவிடம் தனக்கு கொடுக்க வேண்டிய பணம் குறித்து பரந்தாமன்

கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால்

ஆத்திரமடைந்த பரந்தாமன் அவரது கூட்டாளிகள் அமுதாவை அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்து முந்திரி தோப்பிற்குள் புதைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இக்கொலை விவகாரம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் ஐந்து பேரை கைது

செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P