சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் - எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்
புதுடெல்லி, 16 ஏப்ரல் (ஹி.ச) நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கும் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் மூன்று முக்கிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்கப்படுகிறது. அவற்றில் 2029 மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மற்று
Special Parliamentary Session Begins Today


புதுடெல்லி, 16 ஏப்ரல் (ஹி.ச)

நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கும் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் மூன்று முக்கிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

அவற்றில் 2029 மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மற்றும் தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்வது தொடர்பான மசோதா ஆகியவை அடங்கும்.

தொகுதி எல்லைகளை மாற்றியமைப்பது மற்றும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதைய 543-லிருந்து அதிகபட்சமாக 850 ஆக உயர்துவது குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.

அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா, 2026 மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா, 2026 ஆகியவற்றை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிமுகப்படுத்த உள்ளார். அதே நேரத்தில், யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026-ஐ உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்ய உள்ளார்.

நாரி சக்தி வந்தன் அதிநியம் தொடர்பான திருத்தத்தை நிறைவேற்றும் நோக்கில் ஏப்ரல் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை அரசு கூட்டியுள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவற்றை ஒரே நேரத்தில் பரிசீலனைக்கும் நிறைவேற்றத்துக்கும் எடுத்துக்கொள்ள ஏதுவாக, விதி 66-ன் விதிமுறைகளை நிறுத்திவைக்கும் தீர்மானத்தை மக்களவையில் சட்ட அமைச்சர் மேக்வால் முன்மொழிய உள்ளார்.

அந்தத் தீர்மானத்தில், தொகுதி மறுவரையறை மசோதா, 2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 ஆகியவை அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா, 2026-ஐச் சார்ந்துள்ளதால், அவற்றை பரிசீலனைக்கும் நிறைவேற்றத்துக்கும் எடுத்துக்கொள்ளும் தீர்மானங்களுக்கு, மக்களவை நடைமுறை மற்றும் அலுவல் விதிகளின் விதி 66-ன் வரம்புரையை இந்த அவை நிறுத்தி வைக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் 2029 மக்களவைத் தேர்தலில் இருந்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதற்கான திருத்தத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை அரசு நாடுகிறது.

மகளிர் இட ஒதுக்கீட்டை விரைந்து அமல்படுத்துவதை முழுமையாக ஆதரிப்பதாக நேற்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

ஆனால், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்பு தெரிவிப்பதாகவும் அவை கூறியுள்ளன.

இந்த நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் நாடாளுமன்ற அலுவலகத்தில் இன்று எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்கள் ஒன்றுகூடி, சிறப்பு கூட்டத்தொடருக்கான தங்கள் உத்தியை இறுதி செய்ய உள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b