முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சைக் கேட்டு யாரும் கருப்பு கொடி ஏற்ற வில்லை - அண்ணாமலை
ராமநாதபுரம், 16 ஏப்ரல் (ஹி.ச.) பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் போது ஜல்ஜீவன் திட்டத்திற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக 14
Annamalai


ராமநாதபுரம், 16 ஏப்ரல் (ஹி.ச.)

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியின் போது ஜல்ஜீவன் திட்டத்திற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக 1400 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. ஆனால் அந்த பணம் வீணாகி வருகிறது இதுவரை 47 சதவீதம் பணிகள் தான் முடிவடைந்து இருக்கிறது. மத்திய அரசு அவ்வளவு பணத்தை கொட்டிக் கொடுத்தும் அடிப்படை வசதிகளை இந்த அரசு செய்து தரவில்லை.

தமிழகம் இந்தியாவின் கஞ்சா தலைநகராக மாறியதைப் போல ராமநாதபுரம் தமிழகத்தின் கஞ்சா தலைநகராக மாறியிருக்கிறது. இந்த ஆட்சியில் கஞ்சா போதை பொருள் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சைக் கேட்டு யாரும் கருப்பு கொடி ஏற்ற வில்லை. பாராளுமன்ற தொகுதி மறு வரையறை மூலமாக அனைத்து மாநிலங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்க போகிறது.

தமிழகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 இல் இருந்து 59 ஆகவும் கேரளாவில் 20 இல் இருந்து 30 ஆகவும் தெலுங்கானாவில் 18 லிருந்து 28 ஆகவும் அதிகரிக்கப் போகிறது.

இந்த தொகுதி மறு வரையறை மூலம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கும் என்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்.

பெண்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க கூடாது என்பதற்காகவே முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறையை எதிர்க்கிறார்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33 சதவீதம் கொடுக்கக் கூடாது என்பதுதான் முதலமைச்சர் ஸ்டாலினின் எண்ணம் இவ்வாறு கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN