Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 16 ஏப்ரல் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது ராஜீவ் காந்தி நகர் இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
இந்த நிலையில் குடியிருப்பு பகுதி மத்தியில் பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து குறனை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தால் வெளியேற்றும் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு அடைந்து குடிநீர் மற்றும் விவசாயம் பாதிப்படைந்து உள்ளதாகவும் இந்த தண்ணீரை குடித்த மக்களுக்கு வாந்தி மயக்கம் உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் மனுக்களாக கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் இன்று கிராம மக்கள் ஒன்று திரண்டு பிளாஸ்டிக் கம்பெனியை மூடக்கோரி கருப்பு கொடி ஏந்தி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN