Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 16 ஏப்ரல் (ஹி.ச)
ஏப்ரல் 25-ம் தேதி தனது அரசியல் கட்சியான தெலங்கானா ஜாக்ருதியை தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக தெலங்கானா ஜாக்ருதி தலைவர் கவிதா கல்வகுண்ட்லா இன்று புறப்பட்டுச் சென்றார்.
விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தொகுதி மறுவரையறையை மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுடன் இணைக்காமல், 33 சதவீதத்திற்குள் ஓபிசி உள் ஒதுக்கீட்டுடன் இணைக்க வேண்டும். ஓபிசி பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை இது உறுதி செய்யும்.
தற்போது நாடாளுமன்றத்தில் தெலங்கானாவின் பிரதிநிதித்துவம் 3.13 சதவீதமாக உள்ளது. முன்மொழியப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை இந்த இடைவெளியை மேலும் அதிகரிக்கும்.
தற்போதைய நிலவரப்படி நாடாளுமன்றத்தில் தெலங்கானாவின் பங்கு 3.13 சதவீதம். தொகுதி மறுவரையறையின்போது இது அடிப்படை அளவாகக் கருதப்பட வேண்டும். தெலங்கானாவின் விகிதாசார பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் குறையாமல் அதிகரிக்க மட்டுமே வேண்டும்.
தற்போது முன்மொழியப்படும் 50 சதவீதம் ஒட்டுமொத்த அதிகரிப்பு மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகத் தோன்றலாம், ஆனால் முழுமையான எண்ணிக்கையைப் பார்க்கும்போது இடைவெளி அதிகரிக்கும். தெலங்கானாவின் 3.13 சதவீத பங்கு எந்த வகையிலாவது நீர்த்துப்போனால் மக்கள் வீதிக்கு வருவார்கள்.
தொகுதி மறுவரையறையை மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுடன் இணைப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மாறாக, 33 சதவீதத்திற்குள் ஓபிசி உள் ஒதுக்கீட்டுடன் அது இணைக்கப்பட வேண்டும். ஓபிசி பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் எந்த விலை கொடுத்தாவது கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b