Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.)
தூங்கு மூஞ்சி மரம் அடி பகுதி குட்டையாகவும், மேல் பகுதி குடைபோல் பரந்தும் இருக்கும்.
இவை இரட்டைக் கூட்டிலை கொண்டது.
அதில் 2-4 இணை ஈர்க்குகளும், ஒவ்வொரு ஈர்க்கிலும் 2-8 இணைச் சிற்றிலைகள் இருக்கும்.
இரவிலே சிற்றிலைகள் கைகளைக் கூப்புவதுபோல் இணையாக மடிந்து கொண்டு தொங்கும்.
பொழுது சாயும் சமயத்தில் இவ்விலைகள் மூடி தொங்கிக் கொண்டு இருக்கும்.
இதனால் இதை தூங்குமூஞ்சி மரம் என்கின்றனர்.
மேலும் மழை வருவது போல இருக்கும் சமயத்திலும் இப்படி மடிந்து தொங்கிக்கொள்ளும்.
இம்மரத்தில் சில வண்டுகள் விழுந்து இளந்திசுக்களைத் தொலைத்துச் சாற்றை உறிஞ்சும்.
இப்பூச்சிகள் அரிப்பதால் சாறு சிறு மழைத்துளிகள் போல் சிந்துவதுண்டு.
இதனால் இம்மரத்தை மழை மரம் என்றும் அழைப்பர்.
இந்த மரம் 30 வகை உண்டு. இதன் கனியும், இலையும் பசுவிற்குப் போட்டால் பால் அதிகம் கொடுக்கும்.
Hindusthan Samachar / Durai.J