கொடூர சாலை விபத்து – 8 பேர் உயிரிழப்பு, 12 பேர் படுகாயம்
திருப்பதி, 16 ஏப்ரல் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டம், மந்த்ராலயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், கண்டெய்னர் லாரி மற்றும் ஆட்களை ஏற்றிச் சென்ற மினி லாரி நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
விபத்து


திருப்பதி, 16 ஏப்ரல் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டம், மந்த்ராலயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில்,

கண்டெய்னர் லாரி மற்றும் ஆட்களை ஏற்றிச் சென்ற மினி லாரி நேருக்கு நேர் மோதியதில்

ஏற்பட்ட கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து மோதலின் தாக்கம் மிகுந்ததால், கண்டெய்னர் லாரி சாலையோரம் கவிழ்ந்ததுடன், மினி லாரி முழுமையாக நொறுங்கியது.

இந்த விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த 20 பேரில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 12 பேர் கடுமையாக காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த எமிங்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு எமிங்கனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P