திருப்பத்தூரில் காதல் விவகாரத்தில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை
திருப்பத்தூர், 16 ஏப்ரல் (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பம் பகுதியைச் சேர்ந்த ரஜினி இவருடைய மனைவி கோமதி இந்த தம்பதியினருக்கு ஐந்து பெண் பிள்ளை மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர். ரேவதியின் கடைசி மகள் தர்சினி (15) என்பவர
தற்கொலை


திருப்பத்தூர், 16 ஏப்ரல் (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பம் பகுதியைச் சேர்ந்த ரஜினி இவருடைய மனைவி கோமதி இந்த தம்பதியினருக்கு ஐந்து பெண் பிள்ளை மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர்.

ரேவதியின் கடைசி மகள் தர்சினி (15) என்பவரை பக்கத்து வீட்டில் வசித்து வரும் செங்குட்டுவன் மகன் நித்தின் (19) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக இரு வீட்டிற்க்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் திரும்பவும் தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த நித்தியின் உடைய தாய் ரேவதி மற்றும் அவருடைய மகள் இலக்கியா ஆகிய இருவரும் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னுடைய மகனை காதலிப்பாய் எனக் கூறி சிறுமி மற்றும் அவருடைய தாயான கோமதி ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர்.

இதனால் சிறுமியின் முகம் மற்றும் உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.அதுபோல் ரேவதிக்கும் நெஞ்சின் மீது தாக்கியதால் வலியால் துடித்துள்ளார் இந்தநிலையில் ரேவதி மருத்துவமனைக்கு சென்று உள்ளனர்.

இந்த நிலையில் காதலன் உடைய தாயாரே வீடு நுழைந்து தாக்கியதால் மனம் உடைந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத போது தனி அறையில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் உடல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்து சிறுமியின் தந்தை பிணவரையின் முன்பு கத்தி கதறி அழுத சம்பவம் காண்பவர் நெஞ்சை கண்கலங்க செய்தது.

இது குறித்து தந்தை கொடுத்த புகாரின் பேரில் தாய் ரேவதி அவருடைய மகன் நித்தின் மற்றும் அவருடைய மகள் இலக்கியா ஆகிய மூன்று பேரையும் ஜோலார்பேட்டை பேட்டை போலிசார் கைது செய்தனர்.

இவன் காதலிப்பதை அறிந்து சிறுமியின் வீட்டிற்க்கே ஆத்துமேறி சென்று தாக்கியதில் திரும்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam