கரூர் தான்தோன்றிமலை பகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக பழ.கருப்பையா பிரச்சாரம்
கரூர், 16 ஏப்ரல் (ஹி.ச.) கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பகுதியில், அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து திரைப்பட நடிகரும் பேச்சாளருமான பழ.கருப்பையா தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பல்வேறு பக
G


கரூர், 16 ஏப்ரல் (ஹி.ச.)

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பகுதியில், அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து திரைப்பட நடிகரும் பேச்சாளருமான பழ.கருப்பையா தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து வரும் எம்.ஆர். விஜயபாஸ்கர், இன்று தான்தோன்றிமலை பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அவரின் வருகையை ஒட்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் நீண்ட வரிசையில் நின்று ஆலாத்தி எடுத்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பழ.கருப்பையா,

திமுக அரசையும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கி, இரட்டை இலை சின்னத்திற்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதேபோல், அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் பேசிய போது, மாநிலத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து குற்றம்சாட்டி, நல்லாட்சி அமைய அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் திரண்ட பொதுமக்கள் அளித்த வரவேற்பு, தேர்தல் சூழ்நிலையை மேலும் பரபரப்பாகியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P