ஈரோடு கிழக்கு தொகுதியில் பணம் வழங்கிய விவகாரம் – வைரலாகும் வீடியோ, நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?
ஈரோடு, 16 ஏப்ரல் (ஹி.ச.) ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் மனோகரன், தினந்தோறும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, கருங்கல்பாளையம் அருகிலுள்ள கே.என்.கே. ரோடு, திருநகர் காலனி, மூலப்பட்டறை, பூங
பணப்பட்டுவாடா


ஈரோடு, 16 ஏப்ரல் (ஹி.ச.)

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் மனோகரன், தினந்தோறும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, கருங்கல்பாளையம் அருகிலுள்ள கே.என்.கே. ரோடு, திருநகர் காலனி, மூலப்பட்டறை, பூங்குன்றனார் வீதி, பிள்ளையார் கோவில் வீதி, ரங்க வீதி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

இந்தப் பிரச்சாரத்தின் போது, வீர வீதி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மனோகரனுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ஆரத்தி எடுத்த பொதுமக்களுக்கு தலா ரூ.100 பணத்தை அ.தி.மு.க ஆதரவாளர்கள் பொதுவெளியில் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. இதனால், தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P