தி.நகரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை தி.நகர் பகுதியில் 13 மற்றும் 10 வயது சிறுவர்களை குறிவைத்து தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல் நடத்தியதாக 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர
கைது


சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை தி.நகர் பகுதியில் 13 மற்றும் 10 வயது சிறுவர்களை குறிவைத்து தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல் நடத்தியதாக 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது,

‘விக்கி’ என அழைக்கப்படும் குற்றம்சாட்டப்பட்ட நபர், சிறுவர்களுக்கு ஆபாச வீடியோக்களை காட்டி, அதில் காணப்படும் செயல்களை செய்யுமாறு வற்புறுத்தி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த விஷயத்தை வீட்டில் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக கத்தியை தொண்டையில் வைத்து மிரட்டியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, குற்றம் சாட்டப்பட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் மனநல ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam