Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று சென்னையில் தி.நகர் மற்றும் நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக தேர்தல் அதிகாரி சந்தோஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் தவெக தலைவர் விஜய், வேட்பாளர் ஆனந்த், தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் அப்புனு உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2500 நபர்களுக்கு மேல் கூட்டம் கூட கூடாது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது ரோடு ஷோ நடத்தக்கூடாது என கூறி தேர்தல் அதிகாரி அனுமதி கொடுத்திருந்த நிலையில் அதனை மீறி செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
இதே போல சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ரோடு ஷோ'வில் ஈடுபட்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
த.வெ.க., தலைவர் விஜய் மற்றும் ஆயிரம் விளக்கு த.வெ.க வேட்பாளர் ஜேசிடி பிரபாகர் ஆகிய இருவர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்துதல், தேர்தல் நடத்தை விதி மீறுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.
சென்னை வேப்பேரி பகுதியிலும் ரோடு ஷோ' ஈடுபட்டதால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதிலும் த.வெ.க., தலைவர் விஜய் மற்றும் எழும்பூர் தொகுதி த.வெ.க வேட்பாளர் ராஜ்மோகன் ஆகிய இருவர் மீது வேப்பேரி போலீசார் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்துதல், தேர்தல் நடத்தை விதி மீறுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே பெரவள்ளூர் காவல் நிலையத்தில் விஜய் மீது தேர்தல் விதி மீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது 3 வழக்குகள் விஜய் மீது பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ