தொகுதி மறுவரையறை,அரசியல் பயம் காரணமாக ஸ்டாலின் தவறான பிரச்சாரம் – வானதி சீனிவாசன்
சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச) தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதம் அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கடுமையாக வி
Vanathi


Hh


சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச)

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதம் அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் பெண்கள் அதிக அளவில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு இல்லை என குற்றம்சாட்டினார். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும், மக்களின் குரல் முழுமையாக பிரதிபலிக்கவும் தொகுதி மறுவரையறை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், மக்கள் தொகை அதிகரிப்பை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது அரசியலமைப்பு அடிப்படையிலான தேவையாகும் என்றும் தெரிவித்தார்.

1950ஆம் ஆண்டு 36 கோடி மக்கள் தொகைக்கு 489 மக்களவை உறுப்பினர்கள் இருந்த நிலையில், தற்போது 145 கோடி மக்கள்தொகைக்கு இன்னும் 543 உறுப்பினர்களே இருப்பது சீரமைப்பு தேவையை காட்டுகிறது என்றார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அரசியலாக்கி வருகிறார் என்றும், அது அவரது “தோல்வி பயத்தால் உருவான பதற்றம் எனவும் வானதி சீனிவாசன் விமர்சித்தார்.

மேலும், எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையாத வகையில் மறுவரையறை செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்திருப்பதை அவர் நினைவூட்டினார்.

தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவம் குறையாது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசை எதிரியாக சித்தரித்து அரசியல் ஆதாயம் பெற திமுக முயற்சிக்கிறது என்றும், தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டு மக்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் வானதி சீனிவாசன் கூறினார்.

Hindusthan Samachar / P YUVARAJ