Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தும், மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
இதனை தொடர்ந்து சென்னையில் முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று அஞ்சல் வாக்குகள் பெறும் நடைமுறை இன்று தொடங்கியது.
எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு பகுதியில் முதியோர் இல்லத்தில் இருவரிடம் வாக்கு பதிவு பெறப்பட்டது.
இது குறித்து தேர்தல் அலுவலர் ராஜராஜா கூறியிருப்பதாவது,
சென்னையில் 16 தொகுதியில் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 8000க்கும் அதிகமானவர்கள் வீடுகளில் இருந்து வாக்களிக்கிறார்கள். இன்று முதல் அவர்களது இருப்பிடங்களுக்கு சென்று தேர்தல் அலுவலர்கள் வாக்குகளை பெற இருக்கிறார்கள்.
சென்னை சேத்துப்பட்டு MCC பள்ளி அருகே இருக்கும் முதியோர் இல்லத்தில் இரண்டு வயதான முதியோரிடம் வாக்குகளை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.
தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் நேரில் வாக்குகளை வாங்குகிறோம் வெளியில் வரமுடியாத சூழ்நிலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் இருப்பார்கள். தேர்தல் அதிகாரிகள் அவர்கள் இருக்கும் இடத்தில் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.
இவர்கள் வந்தவுடன் ஆவணங்களை சரிபார்த்து மை வைத்து வாக்குகளை செலுத்த வைப்போம். 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் நடக்க முடியாத சூழ்நிலையில் இருந்தால் தேர்தல் கமிஷனில் இருந்து ballot paper கொடுத்து இருக்கிறார்கள் அதனை கொண்டு அவர்கள் விருப்பப்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்குகளை செலுத்திவிட்டு அஞ்சல் வாக்கு பெட்டியில் போடுவார்கள். தேர்தல் அலுவலர்கள் தேர்தல் கமிஷனரிடம் ஒப்படைத்து விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
எழும்பூர் தொகுதியில் நான்கு குழுக்கள் இருக்கிறது ஒரு குழுவிற்கு 40 வாக்குவீதம் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக வாக்குகள் பெறப்பட இருப்பதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த மூன்று நாட்களுக்கு 8000க்கும் அதிகமான வாக்குகள் பெறப்பட இருக்கின்றன.
சென்னை எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு முதியோர் இல்லத்தில் அந்தோணி சாமி மற்றும் ராஜகோபாலிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது.
எழும்பூரில் தொகுதியில் 344 வாக்குகள் இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
Hindusthan Samachar / vidya.b