ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் அனகாபள்ளி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் - பயத்தில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓட்டம்
அனகாபள்ளி , 17 ஏப்ரல் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிர்வால் மக்கள் பயத்தில் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். மாவட்டத்தின் ராம்பில்லி மண்டலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்
A


அனகாபள்ளி , 17 ஏப்ரல் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த அதிர்வால் மக்கள் பயத்தில் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

மாவட்டத்தின் ராம்பில்லி மண்டலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு கடந்த பிறகு திடீரென பூமி அதிர்ந்தது.

அப்போது தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து, பதற்றத்துடன் வெளியே திரண்டனர்.

இது குறித்து வெளியான தகவலின்படி, இன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் இதன் தீவிரம் 3.7 ஆக பதிவாகியுள்ளது.

இதனை தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்.) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

சில விநாடிகள் மட்டுமே நீடித்த இந்த நில அதிர்வு காரணமாக, குறிப்பாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் அச்சம் ஏற்பட்டது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தின் தீவிரம் குறைவாக இருந்ததால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA