Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச.)
அம்மன்யா மூவிஸ் பட நிறுவனத்தின் சார்பில் சி.வி. மஞ்சுநாதா தயாரிப்பில், சு.காளிங்கன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பகவான்”
வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகும் இந்த படத்தில், பிரபல நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மற்றும் ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், ஆடுகளம் நரேன், டெல்லி கணேஷ், ஜெகன், ஆடுகளம் முருகதாஸ், யோக் ஜேபி, பிர்லா போஸ், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, மாஸ்டர் பாண்டி, அஜெய் தாத்தா, ஜெகதீஷ், ஜி.வி. கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு முருகன் சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மகேந்திரன் கணேசன் எடிட்டிங் செய்திருக்கிறார்.
சம்பத் ஜியின் பாடல்வரிகளுக்கு ப்ரசன் பாலா இசையமைத்துள்ளார்.
பின்னணி இசையை யுவராஜ் அமைத்துள்ளார்.
கலா மாஸ்டர் நடன அமைப்பையும், பாலையா கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
ஸ்டண்ட் மாஸ்டராக ஹரி தினேஷ் பணியாற்றியுள்ளதுடன், ஆடை வடிவமைப்பை வினையா தேவ் மேற்கொண்டுள்ளார்.
மக்கள் தொடர்பு பணிகளை புவன் செல்வராஜ் கவனித்துள்ளார். நிர்வாக தயாரிப்பை மூவேந்தர் மேற்கொண்டுள்ளார்.
படம் குறித்து இயக்குனர்
சு. காளிங்கன் கூறுகையில்.....
இந்த பிரபஞ்சத்தில் நமக்கு புரியாத பல விசயங்கள் இருக்கிறது.
அதில் எண்ணற்ற ரகசியங்கள் இருக்கிறது.
நாம் எல்லோரும் பகவானை வணங்குகிறோம்.
இந்த முழு பிரபஞ்சத்தை இயக்குபவர் பகவான் என்றால், அவர் யார்?, அவர் வெறும் உருவமா? இல்லை வேறெதுவுமா? அப்படியெனில் இல்லுமினாட்டி யார்? இந்த கேள்விகளுக்கான பதில் தான் இப்படத்தின் மையம்.
நாம் அறியாத புராண கால வரலாற்றின் பின்னணியில் மித்தாலஜிகல் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.
“பகவான்” ஒரு சாதாரண கதையாக இல்லாமல், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் விதமாக உருவாகியுள்ளது.
நாம் அறிந்த மகாபாரத கதையின் ஒரு பகுதியும் இதில் வரும், இப்படத்தில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது, நாம் பொதுவாக கவனிக்காமல் இருக்கும் ஒரு சாதாரண உயிரினமான பல்லி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக இடம்பெறுகிறது.
இப்படி பல சிறப்புகள் இப்படத்தில் உள்ளன.
மொத்தத்தில், “பகவான்” படம் ஒரு புதிய சிந்தனையுடன், வித்தியாசமான கதை அமைப்பு மற்றும் பலத்த தொழில்நுட்ப அம்சங்களுடன் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் படைப்பாக இருக்கும் என்றார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
Seventh ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் கண்ணன் இப்படத்தை மே மாதம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
Hindusthan Samachar / Durai.J