Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 16 ஏப்ரல் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள உபதலை கிராமத்தில் வினி ஆண்டோ ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் கடந்த நான்கு
ஆண்டுகளுக்கு முன் பெண்ணின் குடும்பத்தார்
காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்து காவல் நிலையத்தில்
பேச்சுவார்த்தை நடத்ததற்கு பின் இருவரும் பிரிந்து இருந்துள்ளனர்.
அந்தப் பெண் வேறு ஒருவரை காதலித்து அவருடன் ஓடிப்போனதாக கூறப்படுகிறது.
ஓடிப்போனவரை விட்டுவிட்டு வந்து
மீண்டும் குடும்பத்தோடு இருந்த பெண் மீண்டும் அடிக்கடி ஆட்டோ ஓட்டுனர் வினி ஆண்டோயுடன் பேசி வந்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக ஆட்டோ ஓட்டுனர் வினி ஆண்டோயுடன்
போனில் பேசி தகராறு ஈடுபட்டதாக தெரிகிறது இந்த நிலையில் இன்று வீட்டிற்கு வர சொல்லி போனில் கூப்பிட்டுள்ளார்.
பெண்ணின் வீட்டிற்கு சென்ற ஆட்டோ ஓட்டுனர் வினி ஆண்டோக்கும் அந்தப் பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது அந்த நேரத்தில் கஞ்சா போதையில் இருந்த
பெண்ணின் அண்ணன் சௌப்பீஸ் மற்றும் தந்தை ரவி இருவரும் வினி ஆண்டோ விடம் தகராறு
ஈடுபட்டுள்ளனர்.
தகராறு முற்றிய நேரத்தில் கஞ்சா போதையில் இருந்த பெண்ணின் அண்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து வினி ஆண்டோவின் இடுப்பு வயிறு பாகத்தில் குற்றியதில் பலத்த காயம் ஏற்பட்ட ஆட்டோ ஓட்டுனரை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சில் குன்னூர் மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர் மருத்துவமனை வரும் வழியிலேயே வினி ஆண்டோ உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் நண்பர்கள் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்த வந்த குன்னூர் டிஎஸ்பி மற்றும் அருவங்காடு காவல்துறையினர்
விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து கஞ்சா போதையில் இருந்த பெண்ணின்
அண்ணன் சௌவ்பீஸ் அவரது தந்தை ரவியை கைது செய்தனர்.
மேலும் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனர் வினி ஆண்டோ உடலை பிரேத பரிசோதனைக்காக உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam