பீகார் புதிய முதல்வர் சம்ராட் சௌதரிக்கு கொலை மிரட்டல் – மிரட்டல் விடுத்த நபர் கைது
பாட்னா , 17 ஏப்ரல் (ஹி.ச.) பீகார் மாநிலத்தின் புதிய முதல்வரான சம்ராட் சௌத்ரி முதல்வராக பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த மிரட்டல் வந்தது. இது குறித்து,போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முங்கேர் போலீசார் சிறப்பு குழுவை அமைத்து, தொழில்நுட்ப உத
B


பாட்னா , 17 ஏப்ரல் (ஹி.ச.)

பீகார் மாநிலத்தின் புதிய முதல்வரான சம்ராட் சௌத்ரி

முதல்வராக பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த மிரட்டல் வந்தது.

இது குறித்து,போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

முங்கேர் போலீசார் சிறப்பு குழுவை அமைத்து, தொழில்நுட்ப உதவியுடன் மிரட்டல் விடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை கண்காணித்தனர்.

இதில், மிரட்டல் விடுத்த நபர் குஜராத் மாநிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து குஜராத்தின் சனந்த் பகுதியில் பதுங்கி இருந்த சேகர் யாதவ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரை டிரான்சிட் ரிமாண்ட் மூலம் பீகாருக்கு அழைத்து வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த மிரட்டலுக்குப் பின்னால் வேறு யாரேனும் உள்ளனரா? எந்த காரணத்தால் மிரட்டல் விடுக்கப்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், பீகார் அரசியலில் சமீபத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

நிதீஷ் குமார் மாநிலங்களவைக்கு சென்றதைத் தொடர்ந்து, சம்ராட் சௌதரி முதல்வராக பொறுப்பேற்றார்.

புதிய அரசில், முதல்வர் 29 துறைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA