ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம் இடையில் நிறுத்தம்
துாத்துக்குடி, 17 ஏப்ரல் (ஹி.ச.) துாத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கள்ளபிரான் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவதாக கருதப்படும் இக்கோவிலில், சித்திரை திருவிழா வ
Chariot Festival at Srivaikuntam Kallapiran Temple Halted Midway


துாத்துக்குடி, 17 ஏப்ரல் (ஹி.ச.)

துாத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கள்ளபிரான் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவதாக கருதப்படும் இக்கோவிலில், சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சித்திரைத்திருவிழாவின் ஒருபகுதியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

சித்திரை திருவிழாவில் 9ஆம் நாளான இன்று திருத்தேரோட்டம் தொடங்கிய நிலையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தபோது தேரை தள்ளும் தடி உடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைத்தனர்.

தொடர்ந்து தேரின் தடியை சீரமைக்கும் பணி நடைபெற்றதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேரை இழுக்க முடியாமல் பக்தர்கள் காத்திருkகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகின்றது.

Hindusthan Samachar / vidya.b