சென்னை காவலர்களுக்கு தபால் ஓட்டு பதிவு - 18 மற்றும் 20ஆம் தேதிகளில் ஏற்பாடு
சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச) சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி, 16 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு தபால் ஓட்டு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை காவல்துறையில் பணியாற்றும் 29
Pol


சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி, 16 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு தபால் ஓட்டு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை காவல்துறையில் பணியாற்றும் 29 பிரிவுகளைச் சேர்ந்த காவலர்கள், இரண்டு நாட்களில் காலை மற்றும் மாலை அமர்வுகளாக தபால் ஓட்டுகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.

மொத்தம் 18,971 காவலர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்ய உள்ளனர். இதில், 18ஆம் தேதி 9,703 காவலர்களும், 20ஆம் தேதி 9,268 காவலர்களும் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ