மாவீரர் தீரன் சின்னமலை வழியில் தாய்த்தமிழ்நாட்டினைக் காப்போம் - தவெக தலைவர் விஜய்
சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச) ஆங்கிலேயப் படைகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இந்திய விடுதலைப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாவீரர் தீரன் சின்னமலையின் வ
மாவீரர் தீரன் சின்னமலை வழியில் தாய்த்தமிழ்நாட்டினைக் காப்போம் - தவெக தலைவர் விஜய்


சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச)

ஆங்கிலேயப் படைகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இந்திய விடுதலைப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாவீரர் தீரன் சின்னமலையின் வீரத்தை நினைவுகூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிட்டு வெற்றி கொண்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளில், அவரின் தியாகத்தைப் போற்றுவோம்!

அவரைப் போலவே நாமும் தாய்த்தமிழ்நாட்டினைக் காப்போம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b