தீரன் சின்னமலை பிறந்தநாள் - முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து
தமிழ்நாடு, 17 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், நேரடியாக போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் தீரன் சின்னமலையை வீழ்த்தியதாக குறிப்
ஸ்டாலின்


தமிழ்நாடு, 17 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், நேரடியாக போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் தீரன் சின்னமலையை வீழ்த்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்!

அன்று, நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் சூழ்ச்சியால்தான் சின்னமலையை வீழ்த்த முனைந்தார்கள்!

இன்றோ, தமிழ்நாட்டுக்குள் நேரடியாக நுழைய முடியாத டெல்லி ஆதிக்கவாதிகள் 'தொகுதி மறுவரையறை' எனும் சதித் திட்டத்தால் நம்மை அரசியல் வலிமையற்றவர்களாக்க முனைகிறார்கள்.

அன்று, சின்னமலையைக் காட்டிக் கொடுத்தான் ஒரு துரோகி. இன்றும் சில அடிமைகள் தங்கள் சுயநலத்துக்காகத் தாய்த்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே RSS எஜமானர்களின் காலடியில் அடகு வைக்கின்றனர்.

இந்த ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து #TNWillFightTNWillWin எனத் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன்! வெல்வோம்ஒன்றாக!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam