Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 17 ஏப்ரல் (ஹி.ச.)
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக, சென்னை நகரில் இருந்து பெருமளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, வரும் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து, 5,000-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளையும் இயக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. மொத்தமாக 10,663 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
23ஆம் தேதி நடைபெறும் தேர்தலை முன்னிட்டு அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளதால், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் முக்கிய வழித்தடங்களான மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளில் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பு ஏற்பாடுகள் மூலம் சென்னையில் வசிக்கும் தொழிலாளர்கள், ஐடி ஊழியர்கள் உள்ளிட்டோர் எந்த சிரமமும் இன்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam