Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 17 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் அடுத்த வாரம் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கரூர் தொகுதியில் வாக்காளருக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு அடிப்படையில் செந்தில் பாலாஜியின் நண்பர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சரும், கரூர் திமுக மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜியின் மிக நெருங்கிய நண்பரும், ஒப்பந்ததாரருமான எம்.சி. சங்கர் ஆனந்த் என்பவரின் இரு அலுவலகங்கள், அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று (17.04.2026) காலை 11 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செந்தில் பாலாஜியின் மற்ற இரு நண்பர்களுக்குச் சொந்தமான உணவகத்திலும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜனும் சொந்தமான, அவர் பங்குதாரராக உள்ள ஏற்றுமதி நிறுவனத்திலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றதும், அதனைத் தொடர்ந்து கிரானைட் நிறுவனத்திலும் மூன்று நாட்கள் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b