தீரன் சின்னமலை 271வது பிறந்தநாள் - சேலத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி ம
Eps


சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு, தீரன் சின்னமலையின் வீரத்தையும் தேசப்பற்றையும் போற்றினர்.

மேலும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தீரன் சின்னமலையின் தியாகம் என்றும் நினைவுகூரப்பட வேண்டியது என்றும், அவரது வழியில் இளைஞர்கள் நாட்டுப்பற்றுடன் செயல்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தீரன் சின்னமலை போன்ற வீரர்களின் வரலாறு இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதையும், அவர்களின் தியாகம் மற்றும் வீரத்தை போற்றுவது ஒவ்வொருவரின் கடமையெனவும் அவர் குறிப்பிட்டார்.

Hindusthan Samachar / P YUVARAJ